வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் நேரடியாக தலையிடுவேன்!

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களை சந்தித்த சஜித் – முக்கிய உறுதி
கொழும்பு | Iconic Media
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நேரடியாக தலையிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச அண்மையில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பது அமைந்திருந்தது.
இதன்போது, குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து, எதிர்க்கட்சி என்ற வகையில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தேவையான தலையீடுகளை மேற்கொள்வதுடன், சமூகப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாக தலையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
🔴 வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
🔴 அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன?
என்பது தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
#IconicMedia #SriLanka #SajithPremadasa #Tamil #North #East #TamilSpeakingPeople #BreakingNews