🔴 தரமான கல்விக்காக ஆசிரியர் சேவை வலுப்படுத்தப்படும்!

0

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு – உயர்கல்வித் துறையிலும் அதிரடி நடவடிக்கை

Iconic Media

தரமான கல்வி முறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மனித வளத்தை வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

📌 விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
📌 புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்தல்
📌 வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு விசேட கவனம்
📌 ஆசிரியர் இடமாற்ற முறையை வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தல்
📌 கஷ்டப் பிரதேச ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் அளவுகோல்களை மீளாய்வு செய்தல்

என்பன தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல், தேசிய கல்வி நிறுவகத்தின் செயற்றிறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வித் துறையின் தர உறுதிப்படுத்தல் செயன்முறையை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை காணி மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகள், விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கக் கல்வி வசதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரமான கல்வி – வலுவான ஆசிரியர் சேவை – சிறந்த எதிர்காலம்!

#IconicMedia #SriLanka #Education #Teachers #HigherEducation #HariniAmarasuriya #BreakingNews

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *