உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: இருவருக்கும் மரண தண்டனை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.நீண்டகால விசாரணையின் பின்னர், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.