ரத்மலானை கந்தவல வீதி புனரமைப்பு விரைவில் ஆரம்பம்!

0

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான பிரதான அணுகுபாதையான ரத்மலானை கந்தவல வீதி மற்றும் அதன் வடிகால் அமைப்பை அவசரமாகப் புனரமைக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வடிகால் அடைப்புகள், சட்டவிரோத நிர்மாணங்கள், பராமரிப்புக் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து விரைவில் பணிகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *