ஐவர் கொலை வழக்கு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
📰 Iconic Media News Desk
www.iconicmediasl.com