யாழ்ப்பாண எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை.” நடைபெற்று வரும் ஒரு வழக்கில் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. வழக்குடன் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.