சட்டத்தின் கீழ், சுகாதார அதிகாரிகள்

0

தமது இடங்களில் நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. ‘சிவப்பு அறிவித்தல்களை’ வழங்க அதிகாரம் கொண்டுள்ளனர். இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், 25,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருந்தமைக்காக 4,672 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தியுள்ள காவல்துறை, தமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, இந்த உயிரிழப்புகளைத் தடுக்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை கோரியுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *