சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளரானார் முன்னாள் VC, MP எஸ்.எம்.எம். இஸ்மாயில்!

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அரச சார்பற்ற நிறுவனமான சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் மாநாடு அண்மையில் சீனாவில் இடம்பெற்றது.இதன்போதே குறித்த தவிசாளர் நியமனம் செய்யப்பட்டது.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான இவர் சம்மாந்துறை அரசியலில் கால்பதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய பின்னர் தனது ஓய்வுக் காலத்தையும் கல்வியோடு நகர்த்துவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.