குடும்பத் தகராறில் பெண் உயிரிழப்பு; கணவரைத் தேடி பொலிஸார் விசாரணை

www.iconicmediasl.com
04/07/2026
குடும்பத் தகராறு காரணமாக கணவரின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அரலகங்வில, பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான அவரது கணவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.