சம்மாந்துறையில் ஏகலிய கொடசூப்பர் சென்டர்: உள்ளூர் வியாபாரிகள் பொருளாதார நெருக்கடி.

சம்மாந்துறையில் புதியதாக தொடங்கிய ‘ஏகலிய கொட சூப்பர் சென்டர்’ காரணமாக, உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட ஒரு மனுவில், இந்த சூப்பர் சென்டர் பிரதேச சபையின் அனுமதி, வர்த்தக உரிமங்கள், கட்டிட அனுமதிகள் போன்ற அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றியுள்ளதா என்று உடனடி விசாரணை செய்யும்படி கோரியுள்ளது.

வியாபாரிகள் கூறியபடி, இந்த சூப்பர் சென்டர் காரணமாக பல உள்ளூர் வியாபாரிகளின் தினசரி வருமானம் குறைந்ததுடன், பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரமும், பாரம்பரிய வணிக சூழலும் அபாயத்துக்குள் உள்ளன.
வியாபாரிகள் சங்கம், இந்த சூப்பர் சென்டர் சட்டத்திற்கும், நடைமுறைக்கும் முரணான செயல்பாடுகளை கொண்டிருந்தால், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.