🚆 மலையக ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…….

0

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனை மற்றும் கம்பளை வரையிலான மலையக ரயில் சேவை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரம்புக்கனை – கம்பளை இடையிலான ரயில் பாதையில் 103 இடங்களில் ஏற்பட்டிருந்த சேதங்கள் கட்டம் கட்டமாக சீரமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை Intercity உள்ளிட்ட நாளாந்தம் 8 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன. பயணிகளுக்கான ஆசன முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, பேராதனை கறுப்புப் பாலத்தின் திருத்தப் பணிகள் நிறைவடையாததால் கண்டி மற்றும் மாத்தளை சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போது மலையக ரயில் பாதையின் சுமார் 75% பகுதிகளில் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *