அஹுங்கல்லை து*ப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உ*யிரிழப்பு….

0

அஹுங்கல்லை, வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற து*ப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உ*யிரிழந்துள்ளார்.
இன்று (01) இரவு 8.10 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9mm ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உ*யிரிழந்தவர் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரின் சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்லை பொலிஸார் மூன்று குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *