🔴 கிழக்கு கல்வி அமைச்சின் புதிய செயலாளர் என். மணிவண்ணன்!

0

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான என். மணிவண்ணன் இன்று (28) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் அவர் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால் கடந்த சனிக்கிழமை (25) என். மணிவண்ணன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🌐 www.iconicmediasl.com

#IconicMedia #EasternProvince #Education #NManivannan #Trincomalee #SriLanka

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *