வடக்கு மாகாணத்தில் உயர் செயல்திறன் வெளிப்படுத்திய 15 பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

0

மக்களுக்கு மிகவும் திறமையானதும் துரிதமானதுமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டம் வரை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டில் உயர் செயல்திறனை வெளிப்படுத்திய வடக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களைப் பாராட்டும் “மெஹவர பஸ்சும்” வேலைத்திட்டம் நேற்று (26) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பிரதேச செயலகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.ஜனாதிபதி நிதியத்திற்கான விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றுக்கு விரைவாகப் பதிலளித்தல் உள்ளிட்ட சேவை செயல்திறன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா மூன்று பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டன.இதன்படி, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 15 பிரதேச செயலகங்கள் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *