🔥 கல்முனை – அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு கொழும்பிலிருந்து முக்கிய உதவி!

தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெறுமதியான தீயணைப்பு அங்கிகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.கல்முனை மாநகர சபை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளின் தீயணைப்பு சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.📍 இந்த நிகழ்வு இன்று (25) வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றது.கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பஸ்தசார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.🇰🇷 கொரிய அரசாங்கத்தினால் கொழும்பு மாநகர சபைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தீயணைப்பு அங்கிகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் இருந்து ஒரு தொகுதியே தற்போது கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.🤝 இதற்காக கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையாளருக்கு கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.