🔴 விமானம் புறப்பட சில நிமிடங்கள் முன்… ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்ட FCID கடிதம்!

முன்னைய அழைப்பாணை எதுவும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் மறுப்பு
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, FCID அழைப்பாணையைப் புறக்கணித்துவிட்டு வெளிநாடு சென்றதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்ஷ குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர் ஒருவரின் தகவலின்படி, தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்ற ஷிராந்தி ராஜபக்ஷவிடம், அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், போர்டிங் கேட் அருகே வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID கடிதத்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் FCID தரப்பிலிருந்து வாக்குமூலம் வழங்குமாறு எந்தவொரு அழைப்பாணையும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், முன்னைய அழைப்பாணையை அறிந்திருந்தும் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த விளக்கம் SLPP ஊடகப் பிரிவின் மூலம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (Newswire)