இலங்கையின் அரசியல் வரலாற்றில் 3 முஸ்லிம் சபாநாயகர்கள்! 🇱🇰

0

இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை மூன்று முஸ்லிம்கள் சபாநாயகர் பதவியை அலங்கரித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக அதிகாரமும் கௌரவமும் மிக்க பதவியாக சபாநாயகர் பதவி கருதப்படுகிறது.

1️⃣ H.H. S. இஸ்மாயில்
📍 பிறப்பிடம்: புத்தளம்
⚖️ தொழில்: வழக்கறிஞர்
📅 பதவிக்காலம்: 19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959
🏛️ இலங்கையின் 5ஆவது சபாநாயகர்
✨ பைதுல் மால் புலமைப்பரிசில் நிதியத்தின் ஸ்தாபகர்

2️⃣ M.A. பாக்கிர் மாக்கார்
📍 பிறப்பிடம்: பேருவளை – மருதானை
⚖️ தொழில்: வழக்கறிஞர்
📅 பதவிக்காலம்: 21 செப்டம்பர் 1978 – 30 ஆகஸ்ட் 1983
🏛️ இலங்கையின் 12ஆவது சபாநாயகர்
✨ பழைய பாராளுமன்றத்தின் கடைசி சபாநாயகராகவும், புதிய பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகராகவும் பதவி வகித்தவர்.
✨ முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர்

3️⃣ M.H. முஹம்மத்
📍 பிறப்பிடம்: கொழும்பு – பொரளை
⚓ தொழில்: கப்பல் சார் வியாபாரம்
📅 பதவிக்காலம்: 9 மார்ச் 1989 – 24 ஜூன் 1994
🏛️ இலங்கையின் 14ஆவது சபாநாயகர்
✨ கொழும்பு Islamic Center அமைப்பின் ஸ்தாபகர்.
📖 அல்குர்ஆனை முதன்முறையாக தமிழில் மொழிபெயர்க்கும் பணிக்காக இவரது தந்தை நிதியுதவி வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தும் மூன்று முக்கிய ஆளுமைகள் இவர்கள்! 🇱🇰🕌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *