தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும்!

0

www.iconicmediasl.com

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான அனைத்து விடைத்தாள்களின் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற்ற இப்பரீட்சையில் 2,94,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

மேலும், 48 மையங்களில் 380 குழுக்களைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்களும் பெற்றோர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#Grade5Scholarship #ScholarshipExam #ExamResults #SriLanka #Education #SriLankaNews

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *