மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு.!!

0
IMG_20260716_105712

மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு.!!

[ MBM. மிஸ்காத் ]

​​​மட்டக்களப்பு – அக்கரைப்பற்று வீதியில் கல்முனை, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) காலை மோட்டார் சைக்கிளும் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மிகக் கொடூரமான முறையில் மோதி தள்ளியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் தீவிரத்தினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.​

இவ்விபத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் ‘ஜெயராமன் ஜெகதீஸ்வரன்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது பாண்டியிருப்பில் திருமண பந்தத்தில் இணைந்து வசித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிராந்தியத்தின் உடனுக்குடன் செய்திகளுக்கு இணைந்திருங்கள்: https://iconicmediasl.com/

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *