கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் (Father Amir) ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, இன்று (ஜூலை 12, 2026) காலை 74 வயதில் காலமானதாக அமிரி திவான் (Amiri Diwan) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

www.Iconicmediasl.com
Asmath raseem
இதையடுத்து, நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான அவரின் மறைவுக்கு கத்தார் அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.1995 முதல் 2013 வரை கத்தார் நாட்டின் அமீராக பதவி வகித்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இயற்கை எரிவாயு வள மேம்பாடு மற்றும் உலக அரங்கில் கத்தாரின் செல்வாக்கை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியவர். 2013ஆம் ஆண்டு தனது மகன் தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.