பாரிய போதைப்பொருள்கடத்தல் கும்பல் கைது !

சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து பொலிஸ் மற்றும் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் போதை பொருள் கடத்தும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

04.07.2026 (சனி) அதிகாலை – இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நீண்ட தூரமாக இவர்களை பிடிக்க போராடிய அதிரடி சிறப்பு படையினர் இறுதியாக சாய்ந்தமருது பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கார் மோதி விபத்தாகியபோது, துப்பாக்கி முனையில் கும்பலை சிறப்பு படை கைது செய்துள்ளது.குறித்த சந்தேக நபர்களிடமிருந்து பலகோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும்,மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது