இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை! சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகள் பேரியல் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பபஜார்ஜியோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் இலங்கைக்கான பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, நேற்று பிற்பகல் (30) இலங்கை மத்திய வங்கியில் ஒரு விசேட செய்தியாளர் சந்திப்பை தூதுக்குழுவினர் நடத்தியிருந்தனர். அதன்போதே சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.