4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கியது

0
image

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் துவங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது. மசகு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மூலம், போருக்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

எனவே, அந்த நாட்டுடன் வர்த்தகத்தை செய்யக்கூடாது என்றும், மீறினால் அந்த நாடுகள் மீது கடுமையான வரிகளையும் ஜனாதிபதி ட்ரம்ப் விதித்து வந்தார். அந்த வகையில், 19 நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனிநபர்கள் உட்பட 21 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்தது. மத்திய அரசின் முயற்சியால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஆர்.ஆர்.ஜி. இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட், ஆமதாபாத்தைச் சேர்ந்த கேலக்ஸி பியரிங்ஸ் லிமிடெட் மற்றும் டில்லியைச் சேர்ந்த சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *