டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கம்பளை–நாவலப்பிட்டி ரயில் பாதை சீரமைப்பு தீவிரம்

0

கம்பளை – நாவலப்பிட்டி:
டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில்வே திணைக்களத்தின் பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து சேதமடைந்த ரயில் பாதை கட்டமைப்புகளை மீளமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையான பகுதியில் பல இடங்களில் ரயில் பாதை சேதமடைந்துள்ள நிலையில், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயில் போக்குவரத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாவலப்பிட்டி–கம்பளை பிரிவில் சேதமடைந்த 36 இடங்களில் 30 இடங்களுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், அதிகளவில் சேதமடைந்த எஞ்சிய பகுதிகளின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *