தென்மேற்குப் பகுதிகளில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

0
MediaFile (40)

நாளை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *