மன்னாரில் பரபரப்பு: முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதான வீதியில், சட்டவிரோதமாக முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் நேற்று (04) காலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது மீட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்று மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதன்போது, திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு மாடுகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச் சென்ற 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மன்னார் எமில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மீட்கப்பட்ட மாடுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, மேலும் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து மன்னார் பொலிஸார் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.– Asmath Raseem. www.iconicMediasl.com