⭕பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

0

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, விசாரணைகளை நிறைவு செய்து, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதன் குத்தகைத் தவணைகளைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த வழிமுறைகள் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்தத் தவறியதையடுத்து, வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.அத்துடன், அவர் பயன்படுத்திய அதிநவீன கார் ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது பொறுப்பில் எடுத்திருந்தது.மாத்தறை கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர், குறித்த காரின் குத்தகைத் தவணைகளைச் செலுத்தியமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *