⭕சம்மாந்துறை 14ஆவது நம்பிக்கையாளர் சபைக்குத் தெரிவான நகர் மஹல்லாவைச் சேர்ந்த இருவருக்கும் நிர்வாகத்தினரால் கௌரவம்!

சம்மாந்துறை 14ஆவது நம்பிக்கையாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நகர் மஹல்லாவைச் சேர்ந்த எஸ்.எம்.எம் முஸ்தபா சட்டத்தரணி , அஷ்ஷைக் எம்.வை அஹமட் ஜலீல் மௌலவி ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (06) பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் எம்.எல். தாசிம் (JP) தலைமையில் நஹர் பள்ளிவாசலில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.எல். அப்துல் மஜீத் (JP), செயலாளர் எம்.ஐ. இஸ்ஹாக் நளீமி, பொருளாளர் எம்.எம். நௌஷாட், உப தலைவர் எம்.ஐ.எம். கலீல் நளீமி, நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் டீச்சிங் ஒப் இஸ்லாம் அமைப்பின் பிராந்திய முகாமையாளருமான ஏ.எச்.எம்.புவாத், மஜ்லிஸ் அஷ்ஷூராவின் அமீர் – ஐ.ஏ. ஜப்பார், ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல்.எச். பசீர் மதனி, , முன்னாள் ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் கே.எல். ஆதம்பாவா மதனி, பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் எம்.எல். தாசிம், தமது மஹல்லாவிலிருந்து 21 பேர் கொண்ட நம்பிக்கையாளர் சபைக்கு நிர்வாக ஆளுமை மிக்க இருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மஹல்லாவுக்கும் ஊருக்கும் பெருமையளிக்கும் விடயம் எனவும், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, எமது நஹர் பள்ளிவாசலுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வந்ததுடன், பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்கியதோடு பிரதேச சபை உறுப்பினராகவும் சமூகப் பணி ஆற்றியவர் எனவும், அஷ்ஷெய்க் அல்-ஹாஜ் எம்.வை.அஹமட் ஜலீல், மத்தியஸ்தர் சபையின் தவிசாளராகவும், குவாசி நீதிமன்ற ஜூரியாகவும் பணியாற்றி வருவதுடன் , எமது நகர் பள்ளிவாசலின் முன்னாள் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகராகவும் சமூகத்திற்குப் பணியாற்றியவர் என்பதையும் ஞாபகப்படுத்தினார்.

மேலும் அன்றாடம் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவதற்கு சிரமத்தினை எதிர்கொண்ட நோயாளி ஒருவருக்கு நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் டீச்சிங் ஒப் இஸ்லாம் அமைப்பின் பிராந்திய முகாமையாளருமான ஏ.எச்.எம்.புவாத் அவர்களினால் சக்கர நாற்காலி மற்றும் சிறிய உதவித்தொகையும் வழங்கி வைக்கப்பட்டதுஇறுதியாக புதிய நம்பிக்கையாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இருவருக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மஹல்லாவாசிகளினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்று நிகழ்வு நிறைவுற்றது.