பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்! புதிய விபரம் விரைவில்!
===============
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சமர்ப்பித்த பஸ் கட்டண திருத்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருடாந்த பஸ் கட்டணக் கொள்கையின்படி, ஜூலை 01ஆம் திகதியான இன்று இந்த திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்ற இறக்கம், டொலர் மாற்று விகித வேறுபாடு மற்றும் உதிரிப் பாகங்களின் விலை உயர்வு ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாகும்.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் நவீன தாழ்தள பஸ் சேவைகளை கருத்திற் கொண்டு கட்டண சூத்திரத்தை புதுப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய போக்குவரத்து அமைச்சரின் பிரேரணைக்கு அனுமதி கிடைத்துள்ளதுடன், புதிய கட்டண விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
